காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள், ஆட்டிசம் (Autism Spectrum Disorder) பாதிப்பிற்குள்ளான பாலஸ்தீனக் குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து கேட்கும் பயங்கர வெடிச்சத்தங்கள் காரணமாக, இக்குழந்தைகளின் மனநலம் மற்றும் நடத்தையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தூக்கமின்மை, திடீர் பீதி தாக்குதல்கள் மற்றும் சுய காயம் ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்குக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் இதுவரை 73,380க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காசாவின் பெரும் பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன.
