வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதம் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை இம்மாதத்தின் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 4292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
