2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதிக்கான சுட்டெண்ணில் இலங்கை 30 இடங்கள் முன்னேறியுள்ளது.
2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியிலேயே இலங்கை சர்வதேச சுட்டெண்கள் மற்றும் கடன் தரப்படுத்தல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த அமைதி நிலைமை 0.7% குறைந்துள்ள பின்னணியில், இலங்கை 2.3% நேர்மறையான வளர்ச்சியைப் பேணி, 2024 இல் 100 ஆவது இடத்திலிருந்தும் (புள்ளிகள் 2.195), 2025 இல் 97 ஆவது இடத்திலிருந்தும் (புள்ளிகள் 2.075), 2026 ஆம் ஆண்டளவில் 67 ஆவது இடம் வரை (புள்ளிகள் 1.91) தனது தரவரிசையை வேகமாக உயர்த்திக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளது.
