நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

Date:

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117, சிறப்பு கூட்டு அவசர செயல்பாட்டு மையத்தின் இலக்கங்கள் அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சை திணைக்களமும் இணைந்து செயல்படுத்தும் சிறப்பு கூட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக் காலத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்கும், அவசர கால ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் இந்த கூட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து பங்குதாரர் நிறுவனங்களின் பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த நிலைமைகள் காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் ஏதேனும் தடைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொண்டு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு:’காஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக்...