பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

Date:

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அதன்படி, நேற்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு,
தூதுவர்களாக:

• Jorge Geraldo Kadri – பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர்
• Wei Huaxiang – சீன மக்கள் குடியரசின் தூதுவர்
• கலாநிதி Robert Zischg – ஆஸ்திரிய குடியரசின் தூதுவர்
• Eric S. Meyer – அமெரிக்கத் தூதுவர்
• Francisco Manuel Comprés Hernández – டொமினிகன் குடியரசின் தூதுவர்
• கலாநிதி Mohammed Abdalla Ali Eltom – சூடான் குடியரசின் தூதுவர்
• Nubiela Yanarith Ayala – பனாமா குடியரசின் தூதுவர்
உயர்ஸ்தானிகர்களாக
• D.M. Salahuddin Mahmud – பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்
• பேராசிரியர் Kwasi Obiri-Danso – கானா குடியரசின் உயர்ஸ்தானிகர்
• Siti Arnyfariza Md Jaini – புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர்
• Dharamkumar Seeraj – கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...

கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின்...