விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

Date:

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026.08.13 ஆம் திகதி இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

அக் காலப்பகுதியில் 119 மஹரகம – தெஹிவளை பஸ் பாதையில், பொரலஸ்கமுவை நகரம் மற்றும் பெல்லன்தர சந்தி ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகமவிலிருந்து தெஹிவல நோக்கியும், பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கியும் பயணிக்கும் வாகனங்கள் பெப்பிலியான சந்தியை அடைந்து இடதுபுறம் திரும்பி, ஸ்பார் சுற்றுவட்டம் ஊடாக பெல்லன்தர நோக்கிச் சென்று, நெதிமால ஊடாக தெஹிவளை நோக்கிப் பயணிக்க முடியும்.

மேலும், பொரலஸ்கமுவை மற்றும் காலி வீதியை இணைக்கும் வெரஹெர சந்தியிலிருந்து கங்காராம வீதி ஊடாக கொளுமடம சந்தி வரை செல்லும் மாற்று வீதியைப் பயன்படுத்தி காலி வீதியை அடைய முடியும்.

Popular

More like this
Related

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...

கொழும்பில் காசநோய் பரவ அதிக மக்கள் தொகையே முக்கிய காரணம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

கொழும்பு நகரில் பல வருடங்களாகக் காசநோய் பரவுவதற்கு அங்குள்ள அதிக மக்கள்...

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிந்துள்ள வேட்பாளரான லானா நுஸைபே யார்?

ஐநா சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE)...

சிறையில் உள்ள நாமலுக்கு உணர்வுபூர்வமாக கடிதம் எழுதிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு, முன்னாள்...