22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் ஏழு மனுக்கள் கிடைத்திருந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆகஸ்ட் 19ஆம் திகதி மூன்று மனுக்களின் பிரதிகளும், ஆகஸ்ட் 20ஆம் திகதி மேலும் நான்கு மனுக்களின் பிரதிகளும் தமக்கு கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் கிடைத்த மேலும் இரு மனுக்களுடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை மொத்தம் ஒன்பது மனுக்கள் சபாநாயகரிடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
