டிப்பருடன் – உழவு இயந்திரம் விபத்து: ஐவர் பலி

Date:

மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய – மொனராகலை வீதியில் உள்ள கும்புக்கன ‘களு’ (Kalu) பாலத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

வெல்லவாயவை நோக்கிச் சென்ற டிப்பர் லொறி, எதிர்த்திசையில் வந்த டிராக்டருடன் மோதியதில் இவ்விபத்து நேரிட்டது. விபத்து நடந்தபோது டிராக்டரின் இழுவைப் பெட்டியில் (trailer) 10 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் எட்டு பேர் பலத்த காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக இரு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...