இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

Date:

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவலை வெளியிட்டார்.

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட வைத்தி நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.

விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...