இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான மோசடிச் சம்பவம் ஒன்றை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி போலி ஒப்பந்தங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தகவலின்படி, சந்தேகநபர்கள் நபர்களை பணியகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு போலி ஒப்பந்தங்களை வழங்க முயன்றுள்ளனர்.

பணியகத்தின் முதலாம் மாடியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் போலி இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று (13) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...