“திருக்குர்ஆனை மனனம் செய்வது மூளையின் செயலாக்கத் திறனை அதிகரிக்கும்”: நரம்பியல் பார்வையை விளக்கும் கண் மருத்துவ நிபுணர்!

Date:

திருக்குர்ஆனை மனனம் செய்வது வெறும் ஆன்மீக ரீதியான ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மிகச்சிறந்த நரம்பியல் நுட்பம் (Cognitive Engineering) என்று கண் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான மருத்துவர் ஈஸாம் ஷாஹ்லோல் (Esam Shahlol, MD) தெரிவித்துள்ளார்.

மருத்துவர் எஸாம் ஷஹ்லூல் தனது மருத்துவக் கல்லூரிப் படிப்பு மற்றும் பட்டமளிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கையில்:

“எனது மருத்துவப் படிப்பின்போதும், நான் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றபோதும் ஒரு விஷயத்தை தீவிரமாகக் கவனித்தேன். வகுப்பில் எப்போதும் முதன்மை மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்களாகவே (ஹாஃபிழ்) இருந்தனர். ஆரம்பத்தில் இது வெறும் இறைவனின் ஆன்மீக ஆசீர்வாதம் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.”

பின்னர் மனித மூளையின் இயங்கியல் மற்றும் கற்றல் முறைகள் குறித்து விரிவாகக் கற்றபோது, அதற்கான அறிவியல் பின்னணியை அவர் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 600 பக்கங்களைக் கொண்ட ஒரு புனித நூலை, அதன் மிக நுட்பமான விதிகள் மற்றும் உச்சரிப்புகளுடன் மனனம் செய்வது என்பது மனித மூளைக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த பயிற்சி ஆகும்.

தொடர்ச்சியான மனனம் செய்தல் மற்றும் நினைவு கூர்வது மூளையின் ‘ஒர்க்கிங் மெமரி’ எனப்படும் குறுகிய கால மற்றும் உடனடி நினைவாற்றல் திறனை கணிசமாக விரிவாக்குகிறது.

இந்த தொடர் பயிற்சி, கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு ஒரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த உதவும் வலுவான நரம்பியல் அமைப்பை (Neural Network) மூளையில் உருவாக்குகிறது.

இந்த அற்புத நூல், ஒருவரின் கவனத்தையும் புலன்களையும் தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் பேராற்றலை மனதிற்கு வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு...