நாட்டில் பல பகுதிகளில் 75 மி.மீ அதிக பலத்த மழை!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன், பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையிலான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பிட்ட சில கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக...

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான...

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...