சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
கல்வி நடவடிக்கைகளைப் பாதுகாப்பான முறையில் வழமை போல் தொடர்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் ஆகஸ்ட் 09 ஆம் திகதி முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
