நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 47.3% ஆகக் குறைவு!

Date:

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 47.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது 34.4 சதவீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளதாக அத்திணைக்களத்தின்  பணிப்பாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்து, சராசரியாக 20 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தற்போதைக்கு எஞ்சியுள்ள நீரைக் கொண்டு சிறுபோக  விவசாய நடவடிக்கைகளை முழுமையாக நிறைவு செய்யவும், அடுத்த மழைக்காலம் வரை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடியும் எனத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு நீரைக் கவனமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கான திட்டமிடல்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைவாக பெரும்போகச் செய்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18...

இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

-லத்தீப் பாரூக் இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...