அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (02) முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அமைச்சர்களை அமைச்சர் விஜித ஹேரத் சந்திக்கவுள்ளார்.

அவர் சந்திக்கவுள்ள அமைச்சர்களில், ஐக்கிய அரபு அமீரக மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார் மற்றும் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி ஆகியோர் அடங்குகின்றனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவலின்படி, அமைச்சர் விஜித ஹேரத் நாளை (03) துபாயில் நடைபெறவுள்ள “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் பங்கேற்கவுள்ளார்.

அந்நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அஹ்மத் அல் செயூதி அவர்களுடன் இணைந்து அமைச்சர் விஜித ஹேரத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

இணையம் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?: டாக்டர் அப்துல் கரீம் பக்காரின் சிந்திக்க வைக்கும் பதிவு!

"தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு மனிதனின் சுயாதீனத்தையும் சிந்தனையையும்...

சமூக வலைத்தளப் பாவனை குறித்து தேசிய ஷூரா சபை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்கள்!

சமீபகாலமாக பேஸ்புக் (Facebook), TikTok, WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்திற்கும்...

இலங்கையைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர்.

காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், மிகவும் சிக்கலான இதய நோய்களால்...

நிலவும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும்;ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என...