‘நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை’ தற்போதைய போக்குகள் என்ற கருப்பொருளில் ஒரு புத்திஜீவித்துவ கலந்துரையாடல், நாவல, கொஸ்வத்தவில் உள்ள பஹன ஊடக நிறுவனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
‘பஹன’ ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்-ஸெய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற ஆயர் ஆசிரி பி. பெரேரா, முன்சீஃப் மௌலவி, மஞ்சுள கஜநாயக்க, சுஜீவ கயநாத், மது ஹெட்டியாரச்சி, நிஷாந்த பிரீதிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது, பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட மஹிந்த தேசப்பிரியவிற்கு, பஹன வெளியீடாக வெளிவந்துள்ள ‘ (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) எனும் நூல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நூலை ‘பஹன’ ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா, நூலின் மொழிபெயர்ப்பாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்க மற்றும் பஹன ஊடக நிறுவனத்தின் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.
சிவில் சமூக பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

