அனைத்து மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்!

Date:

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பிரத்யேக வடிவமைப்பிலான இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளை வழங்கும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் இதில் அடங்கும்.

மேலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு வருகை தந்து, உரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு...

ஈரானால் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிப் முனீர்; சிறைக்குள் வாடி வதங்கும் ஜனநாயகம், இம்ரான் கான்

-லத்தீப் பாரூக் பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கான்...

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 47.3% ஆகக் குறைவு!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள...

இனவெறி: டேப்பால் இருக்கையில் கட்டப்பட்ட பயணி: விமானத்தில் பரபரப்பு..

அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து நியூ ஜெர்சி நோக்கிப் பறந்துகொண்டிருந்த ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’...