22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

Date:

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்தச் சட்டமூலங்கள் இலங்கை அரசியலமைப்பிற்கு அமைவாகவே காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 121 (1) சரத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானம் எனக்குக் கிடைத்துள்ளது.

அரசியலமைப்பின் 83ஆவது சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு பிரிவும் அல்லது அதிலுள்ள பகுதிகளும் மக்கள் தீர்ப்பிற்கு (Referendum) உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்றார்.

துறைசார் திருத்தங்கள் தொடர்பாக சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில்,

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் 2ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ’67 ஐ எட்டும் திகதி’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ’67 ஐ பூர்த்தி செய்த திகதி’ என மாற்றப்பட வேண்டும்.

மேலும், இச்சட்டம் அமலுக்கு வரும் திகதியில் பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் நபருக்கு, முதல் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 06 ஆண்டுகள் என்ற பதவிக்கால எல்லைப் கட்டுப்பாடு பொருந்தாது என இரண்டாவது விதியாகச் சேர்க்கப்பட வேண்டும்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என்றும், அவற்றை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்குட்படுத்தி பல்வேறு தரப்பினராலும் உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன் தலைமையிலான நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

செப்டம்பர் 2ஆம் திகதி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...