நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலின் பின்னர் பலத்த மழை

Date:

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மாகாணத்திலும் காலி, புத்தளம், மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும்.இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல...

மொராக்கோ மன்னர் தலைமையிலான புதிய அரசாங்க நியமனம்; பாத்திமா-ஸஹ்ரா மன்சூரி உட்பட 7 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு.

தலைநகர் ரபாத்தில் உள்ள அரச அரண்மனையில் மன்னர் ஆறாம் முகமது தலைமையில்...

இலங்கையின் மிகவும் உயரமான யானை காவன்திஸ்ஸ உயிரிழந்தது

இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது. அண்மைக்காலமாக...

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...