நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

Date:

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்த இரு அதிகாரிகளினால் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்த மாவட்ட செயலகத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவரும், ஹட்டன் வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களும் விசாரணைகளின் அடிப்படையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கணக்காய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தபோது, அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 ஊழியர்கள், 2023ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி மோசடியின் மொத்தத் தொகை சுமார் 6 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...

உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில்...

கடற்படையில் யோஷித ராஜபக்ஷ பெற்ற சம்பள விபரம்: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில்...