பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

Date:

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாளை (14) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் நிக்காயக்களே தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் நலிந்த

பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்ந்து  (காவி...

2027 ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு

2027 ஆம் கல்வியாண்டிற்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000...

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின்...