முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரவிவரும் செய்திகளை அவரது தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
80 வயதான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படுவதற்கு எந்தவிதமான தீவிரமான சுகாதாரப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (13) அன்று அவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அன்றைய தினம் அவரது பிணை மனு பரிசீலிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய விசாரணையொன்றுடன் தொடர்புடைய வகையில் அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
