இலங்கைக்கு அண்மையாக வங்காள விரிகுடாவில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலையுடன் மழைவீழ்ச்சியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய உள்ளூர் ரீதியிலான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதிகாலை வேளையில் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
