செல்வி சுந்தரராம குருக்கள் யதுர்சனாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஒக்டோபர் 25 இல் சிலாபத்தில்!

Date:

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் ஸ்ரீமதி சூரியாயாளினி வீரசிங்கம் அவர்களின் மாணவியும், சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள் மற்றும் மலர்விழி தம்பதிகளின் புதல்வியுமான செல்வி. சுந்தரராம குருக்கள் யதுர்சனா (ரேகா) அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு வருகின்ற 25.10.2026 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 02.30 மணிக்கு சிலாபம் சுதசுன அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் போஷகர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாபெரும் கலை நிகழ்வில் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்:
  • பேராசிரியர் ஏ. எச். எம். அபயரத்ன (பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை)
  • துறைசார் சிறப்பு விருந்தினர்: கலாநிதி ராகினி திருக்குமரன் (முதுநிலை விரிவுரையாளர், தேசியக் கல்வி நிறுவனம், மகரகம)

மேலும்  முன்னிலை சார்ந்த குருமார்கள் மற்றும் மதத் தலைவர்களான விகாஸ்ரத்னா சிவஸ்ரீ K. பிச்சைக்க குருக்கள் (அதிபர், கற்பக விநாயகர் வேத ஆகம வித்தியாலயம், பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு) கலாபூஷணம் சிவஸ்ரீ வெங்கட சுப்பிரமணிய குருக்கள் (வயலின் வித்துவான், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடாதிபதி) கலாநிதி சிவஸ்ரீ S. பத்மநாபன் சர்மா (பீடாதிபதி, இந்து கற்கைகள் பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் / அரங்காவலர், முன்னேஸ்வரம் தேவஸ்தானம்) புத்தியாகம சந்திரரத்ன தேரர் (இணைத்தலைவர், புத்தளம் மாவட்ட சர்வமதக்குழு / விகாராதிபதி, போதிமலு விஹாரை) கலாநிதி தொன் விமல்ஸ்ரீ ஜெயசூரிய (ஆயர், சிலாபம் மறைமாவட்டம்) அஷ்ஷேக் அப்துல் முஜீப் சாலிஹ் (இணைத்தலைவர், புத்தளம் மாவட்ட சர்வமதக்குழு) பங்குபற்றவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள்:
  • எம். ஜே. எம். பைசல் (பாராளுமன்ற உறுப்பினர்)
  • பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் (புத்தளம் பிரதேச அபிவிருத்தி சபை / மாநகர முதல்வர், புத்தளம்)
  • கௌரவ செந்தூரன் வெற்றிவேல் (B.COMM, PCP, CPA Accountant Canada)
இவ்விழாவிற்கு கலை ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு எதிரான மரண...

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்றாளர்கள்!

இலங்கையில் HIV தொற்றாளர்கள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களின் எண்ணிக்கை...

சிறை விதிகளில் திருத்தம்; இடைக்கால அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும்...

மெல்போர்னில் கலாநிதி யாசிர் காதியின் “நடுநிலையான சமூகம்” இஸ்லாமிய மாநாடு வெற்றிகரமாக நிறைவு!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பிரபல இஸ்லாமிய அறிஞர் ஷேக் கலாநிதி யாசிர்...