மஹிந்த ராஜபக்ச கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி;  குடும்பத்தினர் மறுப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரவிவரும் செய்திகளை அவரது தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
80 வயதான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படுவதற்கு எந்தவிதமான தீவிரமான சுகாதாரப் பிரச்சினையும் இல்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (13) அன்று அவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அன்றைய தினம் அவரது பிணை மனு பரிசீலிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய விசாரணையொன்றுடன் தொடர்புடைய வகையில் அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில்...

பொல்கஹாவெல – பேராதணை புதிய ரயில் சேவை ஆரம்பம்

பொல்கஹாவெல மற்றும் பேராதணைக்கிடையில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளின்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...