Wednesday, October 28, 2026

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண தர மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

1 min read · 12 reads

சப்ரகமுவ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக, க.பொ.த. சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு, மாற்றுத் திகதி வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, வெள்ள நிலைமை சீரடைந்ததும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் சென்று புதிய பரீட்சைத் திகதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

மோசமான வானிலை நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் செயல்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடிவதை உறுதிசெய்யும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.