அனோஜன் வழக்கு: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார்; இலங்கை சட்டக் குழு தீவிரம்!

Date:

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு (Anojan Sivarasa) விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சவூதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டு மனு இறுதி செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

முன்னதாக, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், அரசுத் தரப்பு வழக்குரைஞரின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, இந்த வழக்கு இறைவனுக்கு எதிரான குற்றமாக (Hadd offense)க் கருதப்பட்டு மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.

அனோஜன் சிவராசாவின் வழக்கிற்கு உதவவும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தயாரிக்கவும் இலங்கை மூத்த சட்டத்தரணிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று சவூதி அரேபியாவிற்கு நேரடியாகச் சென்றுள்ளது.

இந்த சட்டக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அசார்ட் நவாவி (Azard Navavi), ஜனாதிபதி சட்டத்தரணி  பைச முஸ்தபா (Faizer Musthapha), ஜனாதிபதி சட்டத்தரணி  உபுல் குமாரப்பெரும (Upul Kumarapperuma) மற்றும் சட்டத்தரணி  ஹபீல் பாரிஸ் (Hafeel Farisz) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் (Ameer Ajwad), ஜெட்டாவிற்கான தூதரகப் பொதுச் செயலாளர் நீதிபதி முகமது லப்பார் மற்றும் சில்மி ரி யாஸ்தீன் ஆகியோரும் இந்த சட்ட நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்து வருகின்றனர்.

முன்னதாகத் தூதுவர் அமீர் அஜ்வாத் சிறையில் அனோஜனை நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) சமர்ப்பிக்கப்படுவதற்காக இறுதி செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனு, விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொள்ளும் சட்டப் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள்,...

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...

மாகும்பர Park & Ride வாகன பயன்பாடு 55 வீதமாக உயர்வு

இந்த ஆண்டின் 3வது காலாண்டில் மாகும்பர Park & Ride வசதிகள்...