Friday, November 13, 2026

இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு தினத்தை முன்னிட்டு ‘என் ஒளி’ மாத இதழ் வெளியீடு!

1 min read · 7 reads
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் சுதந்திரப் போராட்டத் தலைவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆய்வு மாணவர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மாணவர்களின் பயன்பாட்டிற்காக ‘EnLight – The Guide’ (என் ஒளி – என் வழிகாட்டி) மாத இதழ்  சிதம்பரத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
நவம்பர் 11 ஆம் திகதியன்று உசுப்பூர் ரோட்டரி கிளப் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய இதினை வெளியிட்டு வைக்க, பிரபல கவிஞர் அறிவுமதி அவர்கள் அதனை முதல் பிரதியாகப் பெற்றுக்கொண்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்விற்குப் பேராசிரியை கதிரேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் பேராசிரியர்களான S. பழனிவேல் ராஜா, A. ரகுபதி, அன்பரசன் மற்றும் தமிழ்நாடு ஆய்வு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பிரபாகரன் வீரஅரசு, குமரவேல், ராஜகுரு, சிவா நந்தினி, தேவ சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பித்துக் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.