Friday, November 20, 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகளில் புதிய நடைமுறை அறிமுகம்!

1 min read · 21 reads

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்கூட்டிய நேர ஒதுக்கீட்டு முறையின் கீழ் மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்கூட்டியே தமக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதையும், காத்திருப்பு நேரத்தைக் குறைத்து விரைவான மற்றும் வசதியான சேவையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாளாந்த நேர ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 011 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இணையவழி முன்பதிவுத் தளமான https://dmtappointments.dmt.gov.lk ஊடாகவோ நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதையடுத்து, நவம்பர் 23ஆம் திகதி முதல் அதிகாலை நேரத்திலேயே நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தேவையற்ற வகையில் வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்பதிவு முறைமை பொதுமக்களின் வசதியை மேம்படுத்துவதற்கும், காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை உப மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.