இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வளிமண்டலவியல் திணைக்களம் உறுதி
இன்று (17) அதிகாலை இந்தியப் பெருங்கடலின் பண்டா கடல் (Banda Sea) பகுதியில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பில், இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித சுனாமி அபாயமும் ஏற்படவில்லை எனவும் அத்திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
2026 நவம்பர் 17 (இன்று) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் கடலுக்கு அடியில் 20 கிலோமீற்றர் பண்டா கடல் பகுதியில் 6.16° தெற்கு அகலாங்கிலும், 131.5° கிழக்கு நெட்டாங்கிலும் பதிவாகியுள்ளது.
உரிய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை பண்டா கடலில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.