இலங்கையில் மழை குறையும் சாத்தியம்
வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இதனால் திருகோணமலையிலிருந்து சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலை காணப்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையிலிருந்து விலகிச் சென்று இன்று மாலையில் தெற்கு மற்றும் அதனை அண்மித்த மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் புயலாக மாற்றமடையும் சாத்தியமுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனிலும் இலங்கையில் நிலவும் மழை நிலைமை இன்று (16) முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஓரளவு மழைக்கு வாய்ப்புள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.