Monday, November 2, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை

1 min read · 8 reads
நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ , மத்திய, தென், ஊவா , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ ஆக இருக்கும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் மிதமான நிலையில் இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில்) வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.