Wednesday, November 18, 2026

2027ஆம் ஆண்டில் தரம் 06க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

1 min read · 22 reads
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் (Cut-off marks) வெளியிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு இன்று (17) அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக உரிய பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிட முடியும்.
மாணவர்கள் தாம் அனுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலையை https://g6application.moe.gov.lk என்ற பிரத்யேக இணையத்தளத்திற்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் எனக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டிற்கான தரம் 6 பாடசாலை ஒதுக்கீடுகளைத் தீர்மானிப்பதற்கு இந்த வெட்டுப்புள்ளிகள் பயன்படுத்தப்படும்.
இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.