ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்!
மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் நிலைமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நீண்டகாலமாக வற்றாமல் நீர் தேங்கியுள்ள வெள்ளப் பகுதிகள், வயல் நிலங்கள் மற்றும் சேற்று நிலங்களுக்குச் செல்லும்போது பொருத்தமான காலணிகளை அணிவதுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவுகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.