ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கியமை எமது நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முடிவு பல தசாப்தங்களாக எமது நாட்டை வழிநடத்தி வரும் சுதந்திரமான மற்றும் அணிசேரா கொள்கையின் பெருமைமிக்க மரபிற்கு இணங்க அமைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலை ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் கீழ் ஒரு ‘அமைதி வலயமாக பேணுவதற்கு இலங்கை கொண்டுள்ள கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.
பல நாடுகள் அழுத்தங்களுக்கு அடிபணியும் தற்போதைய சூழலில், இலங்கை எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச விதிமுறைகள் மீதான மரியாதை, சமநிலை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்துகிறது.
இந்த கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியதற்காக ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கையராக இருப்பதில் நாம் ஏன் பெருமை கொள்கிறோம், பரந்த இதயம் கொண்ட சிறிய தீவான இலங்கை, கொள்கை ரீதியான இராஜதந்திர விழுமியங்களால் பெருமை கொள்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
