மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

Date:

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு முகாமைத்துவத் திட்டம் நேற்று வியாழக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கேகாலை வித்தியாலயத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த “EduCycle” திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்வதன் மூலம் பசுமையான எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வசதிகளை வழங்குவதற்காக சுற்றாடல் அமைச்சுக்கும் நெப்டியூன் பேப்பர்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

தற்போதைய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் பொறுப்புடன் செயற்படுவது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான காரணியாகும் என  இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

பாடசாலைகளில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்களை நிறுவி, நடைமுறை ரீதியான மீள்சுழற்சி முறைகளை ஊக்குவித்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரித்தல்.

கல்வி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் தனியார் துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த ரணசிங்க, சாகரிகா அத்தவுட, சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர காரியவசம், நெப்டியூன் பேப்பர்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் கேகாலை வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...