LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

Date:

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பதிவு செயல்முறை வரும் 18ஆம் திகதி வரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.srilankacricket.lk ஊடாக வீரர்கள் இந்த இணையவழி (Online) பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

LPL தொடரானது நாட்டின் நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மற்றும் ஆர். பிரேமதாச, கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இத்தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட்...

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...