நாட்டின் பல பாகங்களில் மழைக்கான வாய்ப்பு!

Date:

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும்.

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்போக்குவரத்து சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட திசையின்றியும் வீசக்கூடும்.

காற்றின் வேகம் மணிக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும். காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலை முதல் மிதமான கொந்தளிப்பு வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் அக் கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...