கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய 7 பிரதான மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
