சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

Date:

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15) முதல் இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.

இதற்கு முன்னர் இம்முறையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல்வேறு தடைகள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இன்று முதல் இதனைச் செயற்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள பயனர்கள் இனி PayPal ஊடாக சர்வதேச ரீதியிலான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். இணையத்தளங்கள் வாயிலாக பொருட்களைக் கொள்வனவு செய்யவும், ஏனைய வெளிநாட்டு சேவைகளுக்காகவும் இந்தக் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தலாம்.

இலங்கையிலுள்ள வங்கியொன்றினால் வழங்கப்பட்ட Debit அல்லது Credit அட்டைகளை PayPal கணக்குடன் இணைப்பதன் மூலம் இந்தக் கொடுப்பனவுகளை முன்னெடுக்க முடியும். அத்துடன் வெளிநாட்டிலுள்ள ஒருவர் மற்றுமொரு PayPal கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் மற்றும் சேவைகள் PayPal கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதுடன், குறிப்பாக பல்கலைக்கழகக் கட்டணங்களை செலுத்துவதற்கு இது மிகவும் இலகுவானதாக அமையும்.

இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது, கடன் அல்லது வரவு அட்டை (Credit/Debit Card) இலக்கங்களை இணையத்தளங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. PayPal ஊடாக கொடுப்பனவு செய்வதற்கு மின்னஞ்சல் (Email) முகவரி மாத்திரமே போதுமானது. இதன் காரணமாக சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள இதுவொரு முக்கிய வாய்ப்பாகும்.

PayPal கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்லது அதனைப் பராமரிப்பதற்கோ மாதாந்தக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன் கொடுப்பனவுகளைச் செய்யும் போது கொள்வனவாளரிடமிருந்து மேலதிகக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

எவ்விடத்திலிருந்தும் PayPal ஊடாக கொடுக்கல் வாங்கல்களைச் சோதிக்கவும், கொடுப்பனவுகளை நிர்வகிக்கவும் இலகுவாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...