இன்று முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும்.

Date:

இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் மழை நிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல...

மொராக்கோ மன்னர் தலைமையிலான புதிய அரசாங்க நியமனம்; பாத்திமா-ஸஹ்ரா மன்சூரி உட்பட 7 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு.

தலைநகர் ரபாத்தில் உள்ள அரச அரண்மனையில் மன்னர் ஆறாம் முகமது தலைமையில்...

இலங்கையின் மிகவும் உயரமான யானை காவன்திஸ்ஸ உயிரிழந்தது

இலங்கையின் மிகவும் உயரமான யானை என அறியப்பட்ட காவன்திஸ்ஸ உயிரிழந்துள்ளது. அண்மைக்காலமாக...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலின் பின்னர் பலத்த மழை

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் பலத்த மழை பெய்யுமென...