நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

Date:

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்

வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக...

இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு...

இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...

2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான...