இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் மஹரகம பொலிசாரினால் அவர் கைதாகியுள்ளார்.
அவரை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலையிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் கைதாகியுள்ளார்.
தகாத வார்த்தைகளால் ஊழியரை பேசுவதுடன் அவரை தாக்கும் காட்சிகள் அதில் உள்ளடங்கியுள்ளன. இந்த காணொளி சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.
இதனால் பொதுமக்கள் அவதானம் மற்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
