ஜந்தர் மந்தருக்கு மீண்டும் உயிர் ஊட்டிய ராகுல் காந்தி: மோடி இல்ல வீதியை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Date:

யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும் அது செய்திதான்.

2014-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. ராகுலின் தலைமையில் எம்பிக்களின் பட்டாளமே திரண்டிருக்கின்றது. விசிக எம்பிக்கள்தாம் மிஸ்ஸிங்.

ஆனால் என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே திமுதிமுவென்று மிகப் பெரும் மக்கள் திரள் பிரதமர் வீட்டுக்கு முன்பு திரண்டுவிட்டது.

பிரதமர் வீட்டு வீதியை இன்னொரு ஜந்தர் மந்தராக ஆக்கி, ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டிருக்கின்றார் ராகுல் காந்தி.

‘தர்மேந்திர பிரதானே பதவி விலகு’ என்று ஒலித்து வந்த முழக்கத்தை ‘மோடி, ஷா பதவி விலகு’ என்று மாற்றியமைத்து அடுத்தக் கட்டத்துக்குப் போராட்டத்தை நகர்த்தியிருக்கின்றார் ராகுல்.

கைது செய்கின்ற போது நடந்த களேபரத்தில் ராகுலின் மடிப்புக் கலையாத சட்டையில் மண்ணும் தூசும் படிந்துவிட்டன. அவருடைய மூக்கிலிருந்து ஒரு துளி இரத்தம் வழிந்திருக்கின்றது.

நீட் தேர்வுக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட மாணவர்களின் தியாகத்தோடும்,
மக்களவையை நோக்கி பேரணியாகச் சென்ற போது காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி இரத்தம் சொட்ட சொட்ட, மயங்கி விழுந்தும், காலிலும் கையிலும் மார்பிலும் முதுகிலும் தலையிலும் முகத்திலும் அடிபட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி வலியிலும் வேதனையிலும் துடிக்கின்ற மாணவர்களின் வலியோடும் ராகுலின் கசங்கிப் போன சட்டையையும் ஒரு துளி இரத்தத்தையும் ஒப்பிட முடியாதுதான்.
என்றாலும் கடைசியில் ஒரு வழியாக போராளியாக மாறிவிட்டார், ராகுல்..!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...