இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்குட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 7,777 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவாக 19,825 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 18,475 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் 6,726 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,066 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,013 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
