உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் வாதங்கள் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் நிறைவடைந்துள்ளன. மேலும், இரு தரப்பினரும் தங்களது எழுத்துமூல வாதங்களை செப்டெம்பர் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நவரத்ன மாரசிங்க, நீதிபதிகளான சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பின் வாதங்கள் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் நிறைவடைந்திருந்தன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...

கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!

கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின்...