உலக சந்தையில் 97 டொலர்களை கடந்த கச்சா எண்ணெய் விலை

Date:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் நீண்டகால இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இது 4.6 சதவீத அதிகரிப்பாகும். கடந்த மாதம் எண்ணெய் விலையில் சிறிய அளவிலான அதிகரிப்பு மட்டுமே காணப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை பெப்ரவரி மாத இறுதியில் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் காணப்பட்ட மட்டத்தை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

புத்தளம் தள வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பு நிகழ்வும் பதில் அத்தியட்சகரின் விடைபெறுதல் நிகழ்வும்

புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள...

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர்...