இலஞ்சம் அல்லது ஊழல் விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ கைது

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று காலை நாமல் ராஜபக்ஷவை அழைத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (04) காலை அங்கு ஆஜரானார்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பங்களாதேஷில் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தம்: பிரதமர் தாரிக் ரஹ்மான் முன்னிலையில் கையெழுத்து!

பங்களாதேஷின் 'ஈஸ்டர்ன் ரீஃபைனரி லிமிடெட்'   நிறுவனத்தைச் நவீனமயமாக்குவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் 1...

துனிசியாவில் கடும் வெப்பம்: சிறைகளில் 20 கைதிகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தகவல்!

 துனிசியாவில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் கடும் வெப்ப அலை...

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை!

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பான மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான...

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள்!

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...