சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், பங்களாதேஷைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷேக் முப்தி நஸ்ருல்லா அல் பத்ர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புனித கஃபாவில் உம்ரா வழிபாட்டை நிறைவேற்றுவதற்காகப் பயணித்த அவர், ரியாத் விமான நிலையத்தின் ஊடாகச் செல்லவிருந்த போதே இத்தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலில் இதுவரை குறைந்தது 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து மண்டலத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
அன்னாரது மறைவுக்கு இஸ்லாமிய சமூகத்தினரும், சர்வதேச அமைப்புகளும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
