சாமர சம்பத் எம்.பி. இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க, இன்று (12) லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் ஊடாக மட்டுமே பாஸ்பேட்  ஏற்றுமதியை மேற்கொள்வதற்கு வசதி செய்துகொடுத்தமைக்காக, அந்த நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபா லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவியமையும் இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

இதற்கிடையில், சமர சம்பத் தஸ்ஸநாயக்க ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சியும் இந்த விசாரணை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இயல்பாக்க வலை’ (Normalization Trap): சவுதி அரேபியாவைச் சுற்றியுள்ள பிராந்திய அரசியல் சவால்களும் ஆபத்துகளும்!

யேமன் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் தற்போதைய நிலைப்பாடு, ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள்...

பிராந்தியக் கடற்பரப்பு இறையாண்மையைச் செயற்படுத்துவதற்கானது மட்டுமே; மனிதநேய உதவியைக் கட்டுப்படுத்துவதற்கல்ல; தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை!

இலங்கையின் பொருளாதார மண்டலத்திற்குள் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களில் உள்ள இந்தியா, வங்காளதேசம்,...

சவூதியின் தமாம் சர்வதேச விமான நிலையத்திற்கான பயணங்கள் தற்காலிகமாக ரத்து

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு...